×
Saravana Stores

ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் மின்சாரம் பாய்ந்து 4 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாப்பண்ணா கவுடு என்பவர் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து அப்போதைய ஆதிக்கத்திலிருந்த இஸ்லாமியர்களுக்கு எதிராக போராடியவர். இவருடைய சிலையை ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், உண்டராஜவரம் மண்டலம் தட்டிப்பற்று கிராமத்தில் இன்று காலை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில், அவரை பற்றிய குறிப்புக்கள் மற்றும் அந்த ஊர் பெரியவர்களின் புகைப்படங்களையும் பிளக்ஸ் பேனராக பொருத்தும் பணியில் நேற்று இரவிலிருந்து அங்குள்ள வாலிபர்கள் ஈடுபட்டுவந்த நிலையில் 16 அடி உயரம் கொண்ட பேனர்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஃபிளெக்சியின் உலோக சட்டகம் மின் வயர்களில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து தாக்கியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த காயமடைந்த மற்றொரு இளைஞர் விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டார். உயிரிழந்தவர்கள் தேவராஜு, நாகராஜு, மணிகந்தா மற்றும் கிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகாலை 3.30 மணியளவில் ஃபிளெக்சி பிரேம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி 4 உடல்களையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : AP state Godavari area ,Andhra Pradesh ,Godavari ,Papanna Gawdu ,Telangana ,eastern state of ,Andhra ,
× RELATED பேச மறுத்ததால் விரக்தி காதலி வீட்டில் காதலன் தற்கொலை முயற்சி