×

நேரு அருங்காட்சியகம், ஜாமியா மிலியா உட்பட 12,000 என்ஜிஓ.க்களின் உரிமம் அதிரடி ரத்து: இனிமேல் வெளிநாட்டு நிதி பெற முடியாது

புதுடெல்லி: இந்தியாவில் 12,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ) வெளிநாட்டு நிதி உதவி பெறும் உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் செயல்படும் என்ஜிஓ உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதி உதவிகளை பெற, வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான உரிமத்தை அவ்வப்போது புதுப்பிக்கவும் வேண்டும். இதன் மூலம், இவற்றின் வரவு, செலவுகளை ஒன்றிய அரசு கண்காணிக்கும். பாஜ தலைமையில் ஒன்றிய அரசு அமைந்த பிறகு, என்ஜிஓ.க்கள் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுவதை கடுமையாக கண்காணித்து வருகிறது. இதனால், வெளிநாட்டு நிதி உதவி பெறும் நிறுவனங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.இந்நிலையில், டிசம்பர் 31ம் தேதியுடன் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்காததால், 12,000 என்ஜிஓ.க்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவற்றில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை தானாவே உரிமத்தை  இழந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வரை வெளிநாட்டு நிதி உதவி பெறும் உரிமத்தை பெற்ற என்ஜிஓக்கள் எண்ணிக்கை 22,762 ஆக இருந்தது. ஆக்ஸ்பேம் இந்தியா, ஜமியா மிலியா இஸ்லாமியா, இந்திய மருத்துவ சங்கம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் உள்ளிட்டவை உரிமத்தை இழந்துள்ள பட்டியலில் அடங்கும். இந்நிறுவனங்களின் உரிமம் கடந்த செப்டம்பர் 29, 30ம் தேதிகளில் காலாவதியானது. அதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகம் 3 மாதம் அவகாசம் வழங்கியது. அந்த அவகாசத்திலும் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், 2020ம் ஆண்டு செப்டம்பரில் புதுப்பிக்க தவறிய, தகுதியான 6 ஆயிரம் நிறுவனங்களுக்கு மட்டும், உரிமத்தை புதுப்பிக்க மார்ச் வரை அவகாசம் அளித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அவகாசம் வழங்்கியது குறிப்பிடத்தக்கது….

The post நேரு அருங்காட்சியகம், ஜாமியா மிலியா உட்பட 12,000 என்ஜிஓ.க்களின் உரிமம் அதிரடி ரத்து: இனிமேல் வெளிநாட்டு நிதி பெற முடியாது appeared first on Dinakaran.

Tags : Nehru Museum ,Jamia Millia ,New Delhi ,Union Government ,India ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...