×

முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் போன்றவற்றை பத்திரங்களில் பதிவு செய்யும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

The post முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Chennai ,Tamil State Congress ,President ,G.K. ,Vasan ,Dinakaran ,
× RELATED இந்திய அரசியலமைப்பை ஏற்காதவர் இந்திய...