×

சேலம் மாவட்ட முக்கிய நிர்வாகிகளின் பதவி பறிப்பு: எடப்பாடி திடீர் நடவடிக்கை

சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளின் பதவிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ சக்திவேல், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அசோக்குமார், ஜெ.பேரவை செயலாளர் சரவணன், கொண்டலாம்பட்டி பகுதி 2ன் செயலாளராக இருந்த பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் நித்தின், இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரபு மணிகண்டன் ஆகியோர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

மாணவரணி செயலாளராக இருந்த சக்திவேல், எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்எல்ஏ சக்திவேல் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாணவரணி செயலாளராக இருந்து வந்தார். அதேபோல், அசோக்குமார், பாண்டியன் நீண்ட நாட்களாக அந்தந்த பொறுப்பில் இருந்தனர். இப்போது அவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு, சாதாரண பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீக்கப்பட்டவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை உடனே நியமித்து எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

The post சேலம் மாவட்ட முக்கிய நிர்வாகிகளின் பதவி பறிப்பு: எடப்பாடி திடீர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem ,Edappadi ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami ,MLA ,Sakthivel ,student secretary ,city district ,MGR ,Ashokumar ,J. Assembly ,Saravanan ,Kondalambatti ,
× RELATED பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மீது...