×

7ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: கிருஷ்ணசாமி அறிக்கை

சென்னை: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கை: தேவேந்திர குல வேளாளர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் இழைக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்டிட 3% அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் புதிய தமிழகம் கட்சி முன்னெடுப்பில் வரும் 7ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது.
அப்பேரணியில் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் மண்ணுரிமையை 2006 வன உரிமைச் சட்டத்தின்படி நிலைநாட்டுவது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 7ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறும். பேரணி சென்னை, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 7ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: கிருஷ்ணசாமி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Governor's House ,Krishnaswamy ,Chennai ,New Tamil ,Nadu ,President ,Adi Dravidas ,Arundhatiyar ,New Tamil Nadu ,
× RELATED யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல்...