×

சென்னையில் ஒரகடம் சிப்காட்டில் ‘உலகளாவிய மையம்’ அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்: 127 ஏக்கரில் ரூ2,858 கோடியில் அமைகிறது

* 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்

சென்னை: ஒரகடத்தில் 127 ஏக்கரில் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிக்கோரி செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு செயல்பட்டுவரும் செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த 1998ம் ஆண்டு திருப்பெரும்புதூரில் தனது முதல் நிறுவனத்தை தொடங்கியது. இதற்கு அப்போதைய மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டிவைத்தார். அதன்படி, ஏறத்தாழ 25 ஆண்டுகளாக தமிழகத்திற்கும் செயிண்ட் கோபைன் நிறுவனத்திற்கு இடையே நீண்ட நெடிய தொடர்பு என்பது இருந்து வருகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டில், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில், செயிண்ட் கோபைன் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை நிறுவி ரூ.5000 கோடி முதலீட்டில் 5000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி இருக்கிறது. இதுதவிர, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தையும் செயிண்ட் கோபைன் நிறுவனம் சென்னையில் அமைத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம், செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் உலகளாவிய தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி இருந்தார். இந்த சந்திப்பின் போது, சென்னை ஒரகடம் சிப்காட் பகுதியில் 127 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் ‘உலகளாவிய மையம்’ அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன.

இந்தநிலையில் அம்மையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்க கோரி செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த உலகளாவிய மையம் அமைந்தால் 1,110 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த உலகளாவிய மையத்திற்கான அடிக்கலை முதல்வர் நாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post சென்னையில் ஒரகடம் சிப்காட்டில் ‘உலகளாவிய மையம்’ அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்: 127 ஏக்கரில் ரூ2,858 கோடியில் அமைகிறது appeared first on Dinakaran.

Tags : CENTRE ,ORAKADAM CHIPKAT ,CHENNAI ,Environmental Permits ,Saint Gobain ,Orakhat ,France ,Environmental Permit ,Orkadam Chipkot ,Dinakaran ,
× RELATED சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு...