×

“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி

டெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட சாத்தியமே இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இத்திட்டம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லும் வகையில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டமும், பொது சிவில் சட்டமும் விரைவில் அமலுக்கு வரும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை பிரதமர் மோடியால் நடைமுறைப்படுத்தவே முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது அதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி appeared first on Dinakaran.

Tags : Congress ,Kharge ,PM Modi ,Delhi ,Modi ,president ,Mallikarjuna Kharge ,Gujarat ,Dinakaran ,
× RELATED மின்னணு ஆவண விதியில் திருத்தம்...