×

கீழ்வேளூர் பகுதியில் கனமழை; அறுவடைக்கு தயாரான 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்தது: தானியப்பயிர்கள் அழுகும் அபாயம்

கீழ்வேளூர்: நாகை மாவட்டம் கீழ்வேளூர், திருக்குவளைப் பகுதியில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு  தயாராக உள்ளது. இந்நிலையில் நேற்று முந்தினம் லேசானை மழையும் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து கனமழை பெய்ததால் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதக்கிறது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சம்பா மற்றும் தாளடி நெல் தரிசில் கோடை பயிரான உளுந்து, பச்சை பயறு வகை பயிர்களை நெல் அறுவடைக்கு 10 நாற்களுக்கு முன் தெளித்துள்ளனர். தற்போது தெளித்துள்ள உளுந்து, பச்சை பயறு வகை பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயத்தில் உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். நாகை: நாகை மாவட்டத்தில் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, காமேஸ்வரம், கீழையூர், திருமருகல், திட்டச்சேரி, திருப்பூண்டி, கீழ்வேளூர், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் 442 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயர் நிலையில் உள்ளது. இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்க தொடங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் முழுவதுமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை: மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை நகர் கோ-ஆப்டெக்ஸ் பகுதிக்குப் பின்புறம் உள்ள மேட்டுத்தெரு முனையில் உள்ள மழைநீர் வடிகால்கள் குப்பைகளால் அடைத்து கொண்டதால் மழைநீர் சாலைகளில் தேங்கி அப்பகுதியில் உள்ள கடை மற்றும் வீடுகளுக்கு செல்லமுடியாமல் தண்ணீர் தேங்கியது, உடனே நகராட்சி ஊழியர்கள் அடைப்பை சரிசெய்து மழைநீரை வெளியேற்றினர். நேற்று பெய்த மழைக்கு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளது. மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் மழைநீர் தேங்கியதால் சக காவலர்கள் கடும் சிரமப்பட்டனர். …

The post கீழ்வேளூர் பகுதியில் கனமழை; அறுவடைக்கு தயாரான 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்தது: தானியப்பயிர்கள் அழுகும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Lower Vellore ,Killyvellur ,Nagai District Kilivalelur, ,Thirukkuvala ,Kilivalelur ,Dinakaran ,
× RELATED கீழ்வேளூர் அருகே வயலில் பதுக்கிய 620 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்