×
Saravana Stores

ஒடிசாவில் வாட்ஸ் அப் குழு மூலம் பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.6.28 கோடி பணம் அபேஸ்: தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் கைது

கட்டாக்: ஒடிசாவில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் ஒருவரின் செல்போன் எண் வாட்ஸ் அப் குழுவில் தாமாக சேர்க்கப்பட்டது. அந்த குழுவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தரப்படும் என ஆசைவார்த்தைகள் கூறப்பட்டுள்ளது. அதை நம்பி அந்த நபர் ரூ.6.28 கோடி முதலீடு செய்துள்ளார். அவர் வாங்கிய ரூ.19 மதிப்புள்ள பங்கு திடீரென ரூ.110 ஆக அதிகரித்தது. இதனால் அவரது முதலீடு ரூ.25 கோடியாக அதிகரித்தது.

அதில் ரூ.23 கோடியை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஆனால் பணத்தை எடுக்க முயன்ற போது வாட்ஸ் அப் குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அவர் முதலீடு செய்த ரூ.6.28 கோடி சுமார் 100 வங்கி கணக்கு மூலம் வெவ்வேறு நபர்களுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஏமாந்ததை அறிந்த அந்த நபர் போலீசில் புகார் செய்தார்.

ஒடிசா போலீசார் விசாரித்து தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேர், குஜராத்தை சேர்ந்த 8 பேர், ராஜஸ்தானை சேர்ந்த 7 பேர் உட்பட 24 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.16.85 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. ரூ.6.8 லட்சம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபரிடம் தரப்பட்டுள்ளது. கைதான அனைவரும் கமிஷனுக்காக தங்கள் வங்கி கணக்கில் பணம் பெற்றுத் தந்தவர்கள் என்றும், முக்கிய குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை என்றும் ஒடிசா போலீசார் கூறி உள்ளனர்.

The post ஒடிசாவில் வாட்ஸ் அப் குழு மூலம் பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.6.28 கோடி பணம் அபேஸ்: தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Odisha ,Tamil Nadu Cuttack ,Abes ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாட்ஸ் அப்பில் தம்பதியின் அந்தரங்க...