மதுரை: விதி மீறி கொடியுடன் ஊர்வலமாக வந்த தவெகவினரின் டூவீலர்களை பறிமுதல் செய்த போலீசார், 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை, தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு நேற்று தமிழக வெற்றிக் கழக மதுரை வடக்கு மாவட்ட தலைவர் கல்லாணை தலைமையில் சிலர் டூவீலர்களில் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.
தெப்பக்குளம் போலீசார், டூவீலர்களில் ஊர்வலமாக வர அனுமதி இல்லை என்று தடுத்ததால், சிலை பகுதியில் டூவீலர்களை நிறுத்திவிட்டு, மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் தேவர் சிலைக்கு புறப்பட்டனர். அப்போது போலீசார் விதிகளை மீறி வந்ததாக தவெகவினர் 16 பேர் மீது வழக்கு பதிந்து, வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்திவிட்டு எடுத்து செல்லுமாறும் கூறினர். இதனால், தவெக நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
The post விதிமீறி ஊர்வலம் வாகனங்கள் பறிமுதல் தவெக நிர்வாகிகள் மீது போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.