×
Saravana Stores

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் அஜிலியா மலர்கள்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பெரணிகள், கள்ளிச் செடிகள் மற்றும் மரங்கள் ஆகியவை உள்ளன. அதேபோல், பல வெளி நாடுகளில் காணப்படும் புகழ் வாய்ந்த மரங்கள், மலர் செடிகள் இங்கு வளர்க்கப்படுகிறது. இவைகள் அந்தந்த பருவங்களில் மட்டும் பூக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இத்தாலியன் பூங்காவில் பனிக்காலத்தில் குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் டிசம்பருக்குள் பூக்கும் அஜிலியா மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இந்த மலர்கள் எப்போதும் பனிக்காலத்தில் மட்டுமே பூக்கக் கூடியது. சில மாதங்கள் இந்த செடிகளில் மலர்கள் இன்றி புதர் போன்று காட்சியளிக்கும். தற்போது வெள்ளை மற்றும் ஊதா, இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ள அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாகவும், புகைப்படம் எடுக்கவும் பயன்பட்டு வருகிறது.

The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் அஜிலியா மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Footy State Botanical Garden ,FEEDER ,AZILIA ,STATE BOTANICAL PARK ,Ooty State Botanical Garden ,Noothy Government Botanical Garden ,
× RELATED கனமழை காரணமாக 2 நாட்களாக நிறுத்தப்பட்ட...