- தீபாவளி
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- நாகை
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும்.
தீபாவளியான நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரிலும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை உள்பட 17 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும்.
நவ.2-ல் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அக்.2-ல் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
The post தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.