×
Saravana Stores

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை.. எச்சரிக்கை விடுக்காத வானிலை மையம்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

சென்னை: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இது தொடங்கிய உடனேயே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை குறி வைத்தது. அக்.1ம் தேதி தொடங்கி தற்போது வரை வடதமிழக மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களில் மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் சென்னையில் மழை இல்லாமல் இருந்தது. இப்படி இருக்கையில் இன்று மதியம் 12 மணியளவில் மழை வெளுத்து வாங்க தொடங்கியது. குறிப்பாக அண்ணா நகர், வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், அம்பத்தூர் என கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அல்லாமல், உள் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது.

மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் கூறியதாவது; சென்னையில் அதிகபட்சமாக அண்ணா நகரில் 10 செ.மீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இது வழக்கமான நிகழ்வு அல்ல. சென்னையை கடந்து சென்ற மேகக்கூட்டங்களின் ஒரு பகுதி திடீரென மழையை கொடுத்திருக்கிறது. இது கனமான மேகம் என்பதால் மழை அதிகமாக பெய்திருக்கிறது. அண்ணா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை தொடர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், மணலி புதுநகர், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரையில் ஒரு மணி நேரத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கொளத்தூர், அம்பத்தூர், கொரட்டூர், முகப்பேர், பாடி, வளசரவாக்கத்தில் கனமழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் கனமழை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

The post சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை.. எச்சரிக்கை விடுக்காத வானிலை மையம்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Center ,Pradeep John ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு