×

முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வனின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை : முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும். வேதனையும் அடைந்தேன்.அவரது கவிதைத் தொகுதியை 2001-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டு உரையாற்றிய போது. “பாரதியாருடைய வேகமும். பாரதிதாசனுடைய சொல்வளமும் கொண்டதுதான் தணிகைச்செல்வன் கவிதை என்று சொன்னால் அது மிகையாகாது என்று பாராட்டினார்.

அத்தகைய பெருமையும். புகழும் பெற்ற கவிஞர் தணிகைச்செல்வனின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கும். தமிழ்ச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர். நண்பர்கள். தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.கவிஞர் தணிகைச்செல்வன். தமது கவிதைகள் மூலம். தமிழர்களின் நெஞ்சில் என்றென்றும் நீங்காது நிலைத்திருப்பார்!,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வனின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister MLA ,Thanikaichelwan ,K. Stalin ,Chennai ,Thanikaichelvan ,Chief Minister of ,
× RELATED புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தங்கும் மது பிரியர்கள்