×

மதுரை செல்லூர் கண்மாயில் சிமென்ட் கால்வாய் பணிகளை உடனே மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

மதுரை: மதுரை செல்லூர் கண்மாயில் சிமென்ட் கால்வாய் பணிகளை உடனே மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் வெள்ளபாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில், செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவர் திருமகனார் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார்கள். அதன் பின்னர் மதுரை வந்த முதலமைச்சர் அவர்கள், வணிகவரித் துறை அமைச்சர்பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மதுரையில் வெள்ளபாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது மதுரையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதி மீண்டும் அவ்வாறு நேராதிருக்க உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணியாக 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் அவர்கள் செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேறுவதற்கு சிமெண்ட் கால்வாய் 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட உத்தரவிட்டார். இதன்மூலம் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர்.

The post மதுரை செல்லூர் கண்மாயில் சிமென்ட் கால்வாய் பணிகளை உடனே மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Madurai ,Cellur Kanmai ,K. Stalin ,Madurai Cellur Kanmai ,Madura ,Cellur ,Eye ,CM MLA ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் செயல்பட்டு வரும் விசைத்தறி...