- நீட் தேர்வு சீர்திருத்தக் குழு
- யூனியன் ஊராட்சி
- NEET
- தில்லி
- NEET சீராய்வுக் குழு
- யூனியன் அரசு
- தின மலர்
டெல்லி: நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த ஒன்றிய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. நீட் தேர்வு பணம் வாங்கிக்கொண்டு நடத்தப்படுகிறது. பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாகத் தகவல்கள் வெளியாகின. தேர்வு மையத்தில் தேர்வு கண்காணிப்பாளரே வினாத்தாள்களை நிரப்பியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் போட்டித் தேர்வுக்குத் தயாரான மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் இந்த சம்பவங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நீட் முறை கேடுகளுக்கு எதிராகப் பல்வேறு அரசியல் தலைவர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் குரல் கொடுத்தனர். இதையடுத்து தேர்வுகள் வெளிப்படையாக, சுமுகமாக, நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக உயர்நிலை நிபுணர் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்தது. இக்குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையின் கீழ் 7 பேர் கொண்ட குழு செயல்பட்டது.
இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த ஒன்றிய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆன்லைன் மூலம் நீட் தேர்வை நடத்த முடியாத இடங்களில் வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும். அரசு பள்ளி, கல்லூரிகளில் நீட் தேர்வை நடத்தலாம். மேலும், தனியார் பள்ளி, கல்லூரிகளை நீட் தேர்வு மையங்களாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
The post நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த ஒன்றிய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக் குழு பரிந்துரை..!! appeared first on Dinakaran.