- சபரிமலா த
- திருவனந்தபுரம்
- சபரிமலை அய்யப்பன் கோயில் நடை
- மண்டல பூஜா
- திருவிடங்கூர் தேவாசம்
- குழு
- பிரசாந்த்
- தரிசனா
- தின மலர்
திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்படுகிறது. இவ்வருடம் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட உள்ள வசதிகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியது: தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் சேவைகள் வழங்கப்படும்.
தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும்போதே தங்கும் அறை, பூஜை, பிரசாதம் ஆகியவற்றுக்கும் முன்பதிவு செய்யலாம். சில பக்தர்களுக்கு தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட நேரத்தில் சபரிமலைக்கு வர முடியாத நிலை ஏற்படும். இதனால் அவர்களுக்கு சபரிமலையில் தங்குவதற்கு அறை கிடைக்காத சூழல் ஏற்படுகிறது.
இனி முதல் முன்பதிவு செய்த நேரத்தில் சபரிமலைக்கு வர முடியாவிட்டாலும் அவர்களுக்கு அறை கிடைக்கும். இதற்காக பம்பையில் ஒரு செக் இன் கவுண்டர் திறக்கப்படும். இங்கு பக்தர்கள் உரிய ஆவணங்களை தாக்கல் செய்தால் தங்குவதற்கு வசதி செய்து கொடுக்கப்படும்.தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களில் சராசரியாக 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் வரை சபரிமலைக்கு வருவதில்லை. முன்பதிவு செய்த நாளில் தரிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள் அது குறித்த விவரத்தை தேவசம் போர்டிடம் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கூடுதல் சேவைகள் appeared first on Dinakaran.