- தீஹார் சிறை
- புது தில்லி
- வார்டன்
- நொய்டா
- கஸ்னா தொழிற்பேட்டை
- கௌதம் புத்த நகர் மாவட்டம்
- உத்திரப்பிரதேசம்
- தின மலர்
புதுடெல்லி: நொய்டாவில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் திகார் சிறை வார்டன் உட்பட 5 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள கஸ்னா தொழிற்பேட்டை பகுதியில் கடந்த 25ம் தேதி போதைப்பொருள் தயாரிப்பு ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 95 கிலோ மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருள் திட, திரவ நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில், மெக்சிகோவை சேர்ந்த கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி இதில் சம்மந்தப்பட்ட டெல்லி தொழிலதிபர், திகார் சிறை வார்டன், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை டைரக்டர் ஜெனரல் ஞானேஸ்வர் சிங் கூறி உள்ளார்.
The post போதைப் பொருள் ஆலை நடத்திய திகார் சிறை வார்டன் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.