புதுடெல்லி: பீகாரில் லஞ்சம் வாங்கிய பாட்னா வருமான வரித்துறை ஆணையர் உள்பட 4 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னா மற்றும் தன்பத் வருமான வரித்துறை முதன்மை ஆணையராக இருந்தவர் சந்தோஷ் குமார்.
இவர் மற்றும் இடைத்தரகர்கள் 3 பேர் கூட்டு சேர்ந்து சந்தோஷ் குமாரின் வரம்புக்குள்பட்ட பல்வேறு வருமான வரி மதிப்பீட்டாளர்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடததி வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ஒருவரிடமிருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய சந்தோஷ் குமார் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்தது. இந்நிலையில் 4 பேர் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
The post லஞ்சம் வாங்கிய விவகாரம் வருமான வரித்துறை ஆணையர் உள்பட 4 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.