- திருச்செந்தூர் கோயில்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- திருச்சேந்தூர் சுப்பிரமணியா சுவாமி
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ. 48.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்தார். இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதி 2 தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விடுதியில் ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages) திருக்கோயில் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒரு குடிலுக்கு நாளொன்றுக்கு வாடகையாக ரூ.2,000 நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த 23ம் தேதி முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள் (Double Bed Rooms), 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks), சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை போன்றவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அறைகளுக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கி உள்ளது.
The post திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி பயன்பாட்டிற்கு வந்தது appeared first on Dinakaran.