- ராம் கோயில்
- தீப உற்சவம்
- அயோத்தி
- 8வது தீபாவளி பண்டிகை
- தீபாவளி
- அயோத்தியா, உத்தரப் பிரதேசம்
- Kumbabhishekam
- தீப உற்சவம்
அயோத்தி: ராமர் கோயில் திறப்புக்கு பிறகு தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியில் 8வது தீபஉற்சவ விழா களைகட்ட தொடங்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கோயில் திறக்கப்பட்டது. இந்நிலையில் ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு முதன்முறை நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அயோத்தி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தீபாவளி திருநாளையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு தீப உற்சவ திருவிழா நடைபெறும். அதன்படி அயோத்தியில் தற்போது தீப உற்சவ திருவிழா களை கட்ட தொடங்கி உள்ளது. இதுகுறிதது முதல்வர் யோகி ஆதித்ய நாத் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “தீப உற்சவ திருவிழாவையொட்டி கடந்தாண்டு சரயு நதிக்கரையில் 22 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த ஆண்டு 28 லட்சம் மண் விளக்குகளை ஏற்றி அயோத்தி மாநகரத்தை ஔிர செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தீப உற்சவத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. தீப திருவிழாவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய ஆறு நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
The post ராமர் கோயில் திறப்புக்கு பிறகு தீப உற்சவம் 28 லட்சம் விளக்குகளுடன் ஔிர போகும் அயோத்தி appeared first on Dinakaran.