பெய்ஜிங்: அமெரிக்காவுக்கு நிகராக வல்லரசாக உருவெடுக்கும் கனவுடன் சீனா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 150 நாடுகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்க சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக பெல்ட் அண்ட் ரோட் முன் முயற்சி (பிஆர்ஐ) என்ற பெயரில் திட்டம் தீட்டியுள்ள சீனா, இதில் இணையும்படி பல நாடுகளை வலியுறுத்தி வருகிறது.
சீனாவின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அதில் சேர்வதில்லை என்று இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரேசில் நாடு பிஆர்ஐயில் சேரப் போவதில்லை என தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரேசில் அதிபரின் சிறப்பு ஆலோசகர் செஸ்லோ அமோரிம் நேற்று கூறுகையில், ‘சீனாவின் பிஆர்ஐ திட்டத்தில் நாங்கள் சேரப் போவதில்லை. மாறாக, மாற்று திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.
The post சீனாவின் சர்வதேச திட்டத்தில் சேர பிரேசில் மறுப்பு appeared first on Dinakaran.