×
Saravana Stores

தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாட்டுக்கோழி, சண்டை கோழிகள் அதிகளவில் விற்பனை: பொய்கை கால்நடை சந்தையில் குவிந்த பொதுமக்கள்

வேலூர்: வேலூர் அடுத்த பொய்கை கால்நடை சந்தையில் தீபாவளி பண்டிகையொட்டி நாட்டுக்கோழிகள், சண்டை கோழிகள் அதிகளவில் விற்பனை களைக்கட்டியது. வேலூர் அடுத்த பொய்கையில் இன்று நடந்த கால்நடை சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தற்போது மழை பெய்து வருவதால் தீவனங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது. இதனால் கால்நடைகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் கடந்த வாரத்தை போலவே பொய்கை மாட்டு சந்தைக்கு 50 சதவீதம் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் விற்பனையும் ரூ.40 லட்சம் வரை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதால் பொய்கை கால்நடை சந்தையில் கோழி விற்பனை களைக்கட்டியது. மாடு விற்பனையை விட கோழிகள் விற்பனை அதிகமாக இருந்தது. நாட்டுக்கோழி குஞ்சுகள் ரூ.100 முதல் ரூ.250 வரையும், சண்டைக்கோழி ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், வான்கோழி ரூ.1,100 முதல் ரூ.2 ஆயிரம் வரையும் விற்பனையானது. அதேபோல் வாத்து ஒன்று ரூ.500 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது. இதை போட்டி போட்டு பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: ‘வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பொய்கை கால்நடை சந்தைக்கு வரத்து பாதியாக குறைந்தது.

ரூ.40 லட்சத்துக்கு விற்பனையானது. அதேநேரத்தில் பிற கால்நடைகள் விற்பனை களைக்கட்டியது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையொட்டி நாட்டு கோழி விற்பனை அதிகம் இருக்கும். அதேபோல் இந்தாண்டும் கோழி விற்பனை களைக்கட்டியது. பொதுமக்கள் தீபாவளி பண்டிகை அன்று அசைவம் சமைத்து சாப்பிட நாட்டு கோழிகளை விரும்புகின்றனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒரிஜினல் நாட்டு கோழி சந்தையில் இங்கு கிடைக்கும் என்பதால் அதிகளவில் வியாபாரிகளும், பொதுமக்களும் நேரடியாக வந்து வாங்கி சென்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாட்டுக்கோழி, சண்டை கோழிகள் அதிகளவில் விற்பனை: பொய்கை கால்நடை சந்தையில் குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Vellore ,Diwali ,Lie Livestock Market ,Tirupathur ,Ranipetta ,Thiruvallur ,Krishnagiri ,Dharumpuri ,Salem ,
× RELATED தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில்...