சென்னை: தீபாவளியை முன்னிட்டு பட்டாசுளைக் கையாளுவது குறித்து வழிகாட்டுதலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி நன்னாளில் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடிப்பது வழக்கமான ஒன்றாகும். விடியற்காலை தொடங்கி இரவு வரை விதவிதமான பட்டாசுகளை வெடிப்பவர்கள் ஏராளம். தீபாவளி பட்டாசு வெடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுளைக் கையாளுவது குறித்து சென்னை மாநகராட்சி வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் பட்டாசு வெடிக்க வேண்டும். மின்கம்பங்கள், மின்விளக்குகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசு கழிவுகளை தனித்தனி பைகளில் தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். வாகனம் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும், பட்டாசு கழிவுகளை உலர் கழிவோடு சேர்க்க வேண்டாம். பட்டாசு கழிவுகளை மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்டக்கூடாது என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
The post தீபாவளி பண்டிகை: பட்டாசுளைக் கையாளுவது குறித்து வழிகாட்டுதல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி!! appeared first on Dinakaran.