அரக்கோணம்: அரக்கோணம் அருகே மின் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். காட்டுப்பாக்கம் கிராமத்தில் சற்குணம் என்பவரின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.25,500 லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து கிருஷ்ணனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரக்கோணம் அருகே மின் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது appeared first on Dinakaran.