×

கழிவுப்பொருட்கள் கடத்தலை தடுக்க புளியரையில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

Pulliyaraiசெங்கோட்டை : கழிவுப்பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக – கேரள எல்லையான புளியரையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.தமிழக – கேரளா எல்லையான புளியரை காவல்துறை சோதனை சாவடி வழியாக தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டும், கனரக லாரிகளில் கட்டுமானப் பொருட்களை அளவுக்கு அதிகமாக கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்காக 30 அடி உயரத்திற்கு உயர்நிலை கண்காணிப்பு கோபுரம் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 24 மணி நேரமும் காவலர் ஒருவர் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கோபுரம் மூலம் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளும் தடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இது செயல்பாட்டுக்கு வர உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கழிவுப்பொருட்கள் கடத்தலை தடுக்க புளியரையில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Puliyarai ,Sengotta ,Tamil Nadu-Kerala border ,Tenkasi district ,Puliyarai Police ,Tamilnadu-Kerala ,
× RELATED செங்கோட்டை அருகே வடகரையில்...