சென்னை: சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. Non-Executive பணியாளர்களுக்கு ரூ.15,000 போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் நாளை மறுநாள்(அக். 31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு 3% வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என பலருக்கும் தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. Non-Executive பணியாளர்களுக்கு ரூ.15,000 போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யூ. – சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை வைக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
The post சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிப்பு! appeared first on Dinakaran.