- குந்தவை நாச்சியார் கல்லூரி
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
- முதலமைச்சர் கோப்பை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செங்கல்பட்டு
தஞ்சாவூர், அக்.29: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் மாற்றுத்திறன் மாணவிகள் ஆறு பேர் முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறன் மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று தலா ஐம்பதாயிரம் பரிசுத்தொகை வென்றனர்.
செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் மாணவி கள் தீபலட்சுமி, சுபிக்ஷா, கீர்த்திகா, அபர்ணா நிஜோலியா, திவ்யா ஆகிய 5 மாண விகள் இரண்டாம் இடம் பெற்று தலா ரூ.50,000 பரிசுத் தொகையை வென்றனர்.
இதேபோல் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான தடகளப் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் இளநிலை இரண்டாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவி கிருஷ்ணவேணி பங்கேற்று மூன்றாம் இடம் பெற்று ரூ. 50,000 பரிசுத்தொகை பெற்றார். இந்த போட்டி, செங்கல்பட்டு, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளைக் கல்லூரி முத ல்வர் ஜான் பீட்டர், உட ற்கல்வி இயக்குநர் தேன்மொழி உடற்கல்வி பயிற்சியாளர் மோ சஸ் ராஜ் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.
The post சிறப்பு விளையாட்டு போட்டியில் குந்தவை நாச்சியார் கல்லூரி மாற்றுத்திறன் மாணவிகள் சாதனை appeared first on Dinakaran.