×
Saravana Stores

தீபாவளி பண்டிகையின்போது குற்றங்களை தடுக்க 75 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

 

புதுக்கோட்டை,அக்.29: தீபாவளி பண்டிகையின் போது குற்றங்களை தடுக்க 75 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை எஸ்பி வந்திதா பாண்டே எடுத்துள்ளார். தீபாவளிக் கூட்டத்தின்போது திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில், புதுக்கோட்டை நகர் முழுவதும் 75 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை பேருந்து நிலையம், கீழராஜவீதி, மேலராஜவீதி ஆகிய பகுதிகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த கேமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே இதனை நேற்று திறந்து வைத்துப் பார்வையிட்டார். மேலும், காவல்துறை சார்பில் திருட்டு, செயின் பறிப்பு, மருத்துவ முதலுதவி உள்ளிட்டவற்றுக்காக விழிப்புணர்வு தகவல்களும் அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

The post தீபாவளி பண்டிகையின்போது குற்றங்களை தடுக்க 75 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Pudukottai ,SP ,Vandita Pandey ,Diwali ,
× RELATED தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில்...