சென்னை: சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில், 135 அடி உயர கோபுரம் உள்ளது. இந்நிலையில், ஆவடி பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் பரிஷ்பாஷா (22), நேற்று முன்தினம் இந்த டவரில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதைத்தொடர்ந்து, 2 மணிநேர போராட்டத்திற்கு பரிஷ்பாஷா மீட்கப்பட்டார். இதன்பிறகு இவரை அண்ணாநகர் காவல்நிலையம் கொண்டு வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது, தமிழ்நாடு சிறப்பு காவலராக ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருவதாகவும், நான் பலமுறை என்னுடைய வேதனையை காவல் உயர் அதிகாரியிடம் சொல்லியும் இதுவரை என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றாததால், மன அழுத்தம் காரணமாக, டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்கா, பூங்கா டவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டுப்போட்டனர்.
The post அண்ணாநகர் டவருக்கு பூட்டு: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.