- ஜார்க்கண்ட்
- சட்டசபை
- ஹம்ரோம்
- முதல் அமைச்சர்
- சோரன்
- பாஜக
- ராஞ்சி
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி
- ஹேமந்த் சோரன்
- காங்கிரஸ்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள, 81 தொகுதிகளுக்கு, வரும் நவ. 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. ஜே.எம்.எம் சார்பாக போட்டியிடும், 43 வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
ஜேஎம்எம் கூட்டணியை எதிர்த்து, பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கடந்த, 19ம் தேதி, 66 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. இந்நிலையில், இரண்டாவது வேட்பாளர் பட்டியலை, பாஜ நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில், பர்கைத் சட்டப்பேரவை தொகுதியில், முதல்வர் ஹேமந்த் சோரனை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக கேம்லியேல் ஹேம்ரோம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பர்கைத் தொகுதியில் ஹேமந்த் சோரனை எதிர்த்து ஏ.ஜே.எஸ்.யு., கட்சி சார்பாக ஹேம்ரோம் போட்டியிட்டுவெறும் 2573 ஓட்டுகள் பெற்று நான்காம் இடம் பிடித்து படுதோல்வி அடைந்தார். பின், பாஜவில் சேர்ந்த அவர், தற்போதைய தேர்தலில் முதல்வரை எதிர்த்து மீண்டும் போட்டியிடுகிறார்.
The post ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதல்வர் சோரனுக்கு எதிராக களமிறங்கும் ஹேம்ரோம்: 2வது பட்டியலை வெளியிட்டது பாஜ appeared first on Dinakaran.