புதுடெல்லி: வக்பு வாரிய மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜிக்கும் பாஜ எம்பிக்கும் இடையே அண்மையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை கல்யாண் பானர்ஜி ஓங்கி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று நடந்த ஜேபிசி கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முன்னாள் நீதிபதிகள்,வக்பு வாரிய அதிகாரிகள் குழு முன் ஆஜராகினர்.
அப்போது பேசிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், டெல்லி வக்பு வாரிய அதிகாரி அஸ்வினி குமார் அளித்த அறிக்கையை ஜேபிசி ஏற்று கொள்ளக் கூடாது என்றும் அந்த அறிக்கைக்கு டெல்லி முதல்வர் அடிசி ஒப்புதல் வழங்கவில்லை என்றார். இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும்,பாஜ எம்பிக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சஞ்சய் சிங்,காங்கிரஸ் எம்பிக்கள் நசீர் உசைன்,முகமது ஜாவித்,மொகிபுல்லா(சமாஜ்வாடி), முகமது அப்துல்லா (திமுக), நதிம் உல் ஹக்(திரிணாமுல்), அசாதுதீன் ஒவைசி (ஏஐஎம்ஐஎம்) வெளிநடப்பு செய்தனர். முன்னதாக வருகை பதிவேட்டில் தங்களது பெயர்களை அவர்கள் அழித்து விட்டு சென்றனர்.
The post வக்பு மசோதா ஆய்வு கூட்டத்தில் பாஜ, எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் மோதல் appeared first on Dinakaran.