×
Saravana Stores

பிஷ்னோய் கும்பல் மிரட்டல் இசட் பிரிவு பாதுகாப்பு கேட்கிறார் பப்புயாதவ்

பாட்னா: பீகாரின் பூர்ணியா தொகுதி சுயேட்சை எம்பி பப்பு யாதவ். காங்கிரஸ் ஆதரவாளரான இவருக்கு காங்கிரஸ் கூட்டணியில் சீட் ஒதுக்காதததால் சுயேச்சையாக களம் இறங்கி வெற்றி பெற்றார். மும்பையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் பாபா சித்திக் கொல்லப்பட்ட போது, எனக்கு சட்ட அனுமதி கொடுத்தால் 24 மணி நேரத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை முற்றிலும் ஒழித்து விடுவேன் என்று பப்புயாதவ் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து பப்புயாதவிற்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, இசட் பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்கும்படி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

The post பிஷ்னோய் கும்பல் மிரட்டல் இசட் பிரிவு பாதுகாப்பு கேட்கிறார் பப்புயாதவ் appeared first on Dinakaran.

Tags : Pappuyadav ,Bihar ,Purnia Constituency ,Pappu Yadav ,Congress ,Baba Siddiqui ,Lawrence Bishnoi ,Mumbai ,Z ,
× RELATED கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம்...