புதுடெல்லி: பல்வேறு விமான சேவை நிறுவனங்களை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பயணிகள் கடும் அச்சம் அடைந்தனர். நாட்டின் பல்வேறு முன்னணி விமான சேவை நிறுவனங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு கடந்த 15 நாட்களில் சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பீதி நிலவியது. இந்நிலையில், பல்வேறு விமான சேவை நிறுவனங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இது, விமான பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெடிகுண்டு மிரட்டல்களில் பெரும்பாலானவை, சமூக ஊடகங்கள் மூலம் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விமான சேவை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவை நிறுவனங்களை சேர்ந்த, தலா 21 விமானங்களுக்கும், விஸ்தாரா நிறுவனத்தின் 20 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன’ என்றார்.
The post மேலும் 60 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.