லண்டன்: பிரிட்டனில், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளை கொல்ல முயன்ற வழக்கில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். கிழக்கு லண்டனில் உள்ள டேஹன்ஹாம் பகுதியில் 30 வயது பெண், 8 வயது சிறுமி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த குல்விந்தர் ராம் (48) கைது செய்யப்பட்டுள்ளார். இவரை, நீதிமன்றத்தில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர்.
The post லண்டனில் 3 பேரை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளி கைது appeared first on Dinakaran.