×

சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் பெர்ரிகார்ட் சாம்பியன்

பேசல்: சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீரர் கிவானி பெட்ஷி பெர்ரிகார்ட் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் (22 வயது, 19வது ரேங்க்) மோதிய பெர்ரிகார்ட் (21 வயது, 50வது ரேங்க்) 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இது அவர் வென்ற முதல் ‘ஏடிபி 500’ சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 1975ல் அறிமுகமாக இந்த தொடரில் பட்டம் வென்றவர்களில், இவர் தான் தரவரிசையில் மிகவும் பின்தங்கியவர் ஆவார்.

The post சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் பெர்ரிகார்ட் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Pericard ,Basel ,France ,Kiwani Petchi Pericard ,Swiss Indoor Tennis Series ,Perrycard ,Indoor Tennis ,Dinakaran ,
× RELATED உலகம் முழுவதும் களைகட்டும்...