×

அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு படுக்கையில் ஓய்வெடுத்த தெரு நாய்: வீடியோ வைரல்

கோத்தகிரி: கோத்தகிரி அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு படுக்கையில் தெருநாய் ஓய்வெடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரசு மருத்துவமனை நகர் பகுதியின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையானது உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு உள்பட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

சமீபத்தில் ரூ.3 கோடி மதிப்பில் புதிய அவசர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய் ஒன்று மருத்துவமனைக்குள் நுழைந்து எமர்ஜென்சி வார்டு பிரிவில் உள்ள கட்டிலில் ஏறி படுத்து ஓய்வெடுத்தது. இதனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு படுக்கையில் ஓய்வெடுத்த தெரு நாய்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Kotagiri Government Hospital Emergency Ward ,Nilgiri District ,Gothagiri Government Hospital ,Nagar ,Government Hospital Emergency Ward ,
× RELATED கோத்தகிரி அருகே பரபரப்பு...