×

தேனி, மதுரை மற்றும் சென்னை பகுதிகளில் பொதுமக்களின் வங்கி கணக்குகளை தவறாக பயன்படுத்தி பணம் மோசடி கும்பல் கைது

சென்னை: தேனி, மதுரை மற்றும் சென்னை பகுதிகளில் பொதுமக்களின் வங்கி கணக்குகளை தவறாக பயன்படுத்தி பணம் மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தங்களது அலுவலகத்தின் கிளை அலுவலகம் ஒன்று துபாயில் இயங்கி வருவதாகவும் அந்த அலுவலகத்திற்கு தேவையான பணத்தை USDT (Crypto Coin) ஆக மாற்றி அனுப்புவது வழக்கம் என்றும், இந்நிலையில் குறைவான விலைக்கு USDT ஆக மாற்றி தருவதாக சிலர் தங்களிடம் ஆசை வார்த்தைகள கூறி ரூ.10,00,000/- பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது நிறுவண பணத்தை மீட்டுத்தருமாறும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில், தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டது. தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில், மேற்கண்ட பணம் தேனியில் உள்ள ஒரு வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்டு, குற்றவாளிகள் அந்த பணத்தை எடுத்துள்ளது தெரியவரவே, தனிப்படையினர் தேனிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டபோது, எதிரிகள் அப்பாவி நபர்களிடம் பணத்தை கொடுத்து அவர்களது வங்கி கணக்கை பெற்றுக் கொண்டு, தனியார் நிறுவனங்களிடம் குறைந்த விலையில் USDT ஆக மாற்றித்தருவதாக கூறி மேற்கண்ட வங்கி கணக்கை கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி மோசடியில் ஈடுபட்ட 1.அபிராஜா, வ/29, த/பெ.வைரவன், வீர நாகம்மாள் கோயில் தெரு, கொடுவிலார்பட்டி, தேனி மாவட்டம், 2.லோகநாதன், வ/23, த/பெ.அழகர், முனியப்பன் கோயில் தெரு, பல்லவராயன் பட்டி, தேனி மாவட்டம்.

அஸ்வந்த், வ/23, த/பெ.செல்லதுரை, அன்னை ஶ்ரீமீனாக்ஷி நகர், பொன்மேனி நகர், மதுரை, 4.குமரேசன், வ/28, த/பெ.ஈஸ்வரன், பாலசங்கா பருப்பு மில் ரோடு, தேனி மாவட்டம் 5.மகேஷ்குமார், வ/25, த/பெ.சிவசங்கர், 3வது தெரு, இந்திரா காலனி பள்ளப்பட்டி, தேனி மாவட்டம், 6.முகமது இஸ்மாயில் பர்வேஷ், வ/21, த/பெ.சையது அபுதாகிர், திண்டுக்கல் ரோடு, பள்ளப்பட்டி பஜார், கரூர் மாவட்டம் ஆகிய 6 நபர்களை 25.10.20240 அன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.10,92,000/-, MG Hector Plus கார், 8 செல்போன்கள், 3 ஐபேடுகள், 33 சிம்கார்டுகள், 20 ATM Card, 4 வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மேற்படி 6 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் 26.10.2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post தேனி, மதுரை மற்றும் சென்னை பகுதிகளில் பொதுமக்களின் வங்கி கணக்குகளை தவறாக பயன்படுத்தி பணம் மோசடி கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Theni, ,Madurai ,Chennai ,Theni ,Chennai Metropolitan Police ,South Zone Cyber ,Dinakaran ,
× RELATED இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வழியை...