×

ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியீடு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. அப்போது ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் ஓசூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

அப்போது ஒரு பள்ளி சார்பு மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த நேரத்தில் தனியார் பள்ளி ஆசிரியரின் கை கடிகாரத்தை பள்ளி மாணவிகள் திருடியதாக தகவல் தெரியவந்தது. இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவியையும் அவரது பயிற்சியாளரையும் கடுமையாக திட்டியுள்ளார். அந்த பயிற்சியாளர் புது கைக்கடிகாரத்தை வாங்கி கொடுத்தாலும் அதற்கு அந்த ஆசிரியர் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து மாணவியை கடுமையாக தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளார்.

ஆசிரியை திட்டியதுமின்றி அவரது பெற்றோருக்கு கைக்கடிகாரம் திருடப்பட்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் அவரை பார்த்துள்ளனர். பிறகு அந்த மாணவி இந்த கைக்கடிகாரம் கீழே கிடந்தது என ஆசிரியையிடம் கொடுத்தாலும் அந்த ஆசிரியை சமாதானம் ஆகவில்லை. இதை தொடர்ந்து அந்த பயிற்சியாளர் மாணவியை வளாகத்தின் வெளியே சரமாரியாக தாக்கியுள்ளார்.

இது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து விடீயோ காட்சிகள் வெளியான நிலையில் காவல் துறையினர் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சம்மந்தப்பட்ட பள்ளியில் தற்போது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பயிற்சியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் குறித்து பெற்றோரிடம் சொன்னதால் பெற்றோர்கள் என்னை அடிக்க சொல்லி தெரிவித்ததின் அடிப்படையில் நான் தாக்கினேன் என பயிற்சியாளர் தெரிவித்தார். அதே போல் மாணவியின் பெற்றோரை கேட்டபோது ,மாணவி தவறு செய்ததால் என்னை தொடர்பு கொண்டு கேட்டார் அதனால் நான் அடிக்க சொன்னேன் நான் சொன்னதின் பேரில் அவர் அடித்துள்ளார். இதில் தவறு ஏதும் இல்லை என மாணவியின் பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Hosur ,KRISHNAGIRI ,WIDE ,OSUR BAGALUR ROAD ,KRISHNAGIRI DISTRICT ,Osur ,Dinakaran ,
× RELATED வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் பலி