×
Saravana Stores

பாலிவுட்டில் முதன்முதலாக துபாய் சென்று சீனா தடுப்பூசி போட்ட நடிகைக்கும் கொரோனா

மும்பை: பாலிவுட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரீனா கபூர், அம்ரிதா அரோரா, சீமா கான், மஹீப் கபூர், அர்ஜுன் கபூர், அவரது சகோதரி அன்ஷுலா கபூர், அனில் கபூரின் மகள் ரியா கபூர் மற்றும் அவரது கணவர் கரண் புலனி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடிகை நோரா ஃபதேஹியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நோரா கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மருத்துவர்கள் அவரது உடல்நலம் குறித்து ஆலோசனை வழங்கியுள்ளனர்’ என்று கூறியுள்ளார். மேலும், நடிகை ஷில்பா ஷிரோத்கருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம்  துபாய் சென்றிருந்த அவர், அங்கு சீனாவின் ‘சினோபார்ம்’ தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட முதல் இந்திய நடிகை ஷில்பா ஷிரோத்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். தயவுசெய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அனைத்து கொரோனா தடுப்பு விதிகளையும் பின்பற்றுங்கள்’ என்று ெதரிவித்துள்ளார்….

The post பாலிவுட்டில் முதன்முதலாக துபாய் சென்று சீனா தடுப்பூசி போட்ட நடிகைக்கும் கொரோனா appeared first on Dinakaran.

Tags : Dubai ,China ,Bollywood ,Mumbai ,Kareena Kapoor ,Amrita Arora ,Seema ,
× RELATED துபாயில் Porsche GT3 காரை டெஸ்ட் டிரைவ் AK கிளிம்ப்ஸ் வீடியோ #AK #ajith #ajithkumarracing