புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதியும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறை; நவம்பர் 2ஆம் தேதி கல்லறை நாள், 3ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் மொத்தமாக அக்டோபர் 30ல் இருந்து நவம்பர் 3ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இப்போதிலிருந்தே மக்கள் தங்களின் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1ம் தேதி ஏற்கெனவே அரசு விடுமுறை என புதுச்சேரி அரசு அளித்துள்ளது.
இந்நிலையில் கடைசி நேரக் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமா, தீபாவளிக்கு முந்தைய நாளான அக். 30ம் தேதியும் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுப் பணித் துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறை; நவம்பர் 2ஆம் தேதி கல்லறை நாள், 3ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் மொத்தமாக அக்டோபர் 30ல் இருந்து நவம்பர் 3ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்.30ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 16 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதியும் விடுமுறை என அறிவிப்பு appeared first on Dinakaran.