×
Saravana Stores

இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத் ஸ்டேட் வங்கி தேர்வு!

டெல்லி: இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத் ஸ்டேட் வங்கியை அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்துள்ளது. வங்கிகளின் சேவை தரம், நிர்வாகம், நிதி திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்கிறது. வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி மாநாட்டில் விருதை எஸ்.பி.ஐ.தலைவர் சி.எஸ் ரெட்டி பெற்றுக் கொண்டார்.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வங்கிகளில் சேவை தரம், நிர்வாகம், நிதி திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த வங்கிகளை குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்து வருகிறது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பொருளாதாரப் பத்திரிகையான ‘குளோபல் ஃபைனான்ஸ்’ 2024ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத ஸ்டேட் வங்கியை தேர்வு செய்துள்ளது.

வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி மாநாட்டில் இந்த விருதை எஸ்பிஐ தலைவர் பெற்றுக் கொண்டார். இது தொடா்பாக எஸ்பிஐ தெரிவித்துள்ளதாவது; “வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (IMF)/ உலக வங்கி (WB) ஆண்டுக் கூட்டங்கள் 2024-ன் போது நடைபெற்ற 31வது ஆண்டு சிறந்த வங்கி விருது வழங்கும் நிகழ்வில் குளோபல் ஃபைனான்ஸ் இதழால் 2024 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த வங்கியாக SBI அங்கீகரிக்கப்பட்டது.

எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத் ஸ்டேட் வங்கி தேர்வு! appeared first on Dinakaran.

Tags : Bharat State Bank ,India ,Delhi ,State Bank of India ,US Global Finance ,Global Finance ,World Bank Conference ,Washington ,Dinakaran ,
× RELATED பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை.!...