- வங்காளதேச கொலை நீதிமன்றம்
- டாக்கா
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
- ஜியாவூல் ஹசன்
- ஹசீனா
- ஷேக் ஹசினா
- வங்காளம்
- அமைச்சர்கள் நீதிமன்ற
டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசினா ஆட்சி காலத்தில் ராணுவ தளபதியாக இருந்த ஜியாவுல் ஹசன்,10 முன்னாள் அமைச்சர்கள்,ஹசீனாவின் முன்னாள் ஆலோசகர்கள் 2 பேர் உட்பட 20 பேருக்கு டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்கள் போராட்டத்தின் போது நடந்த மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் சம்மந்தமாக அடுத்த மாதம் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு நடந்த கலவரத்தில் 753 பேர் பலியாகினர்.1000 பேர் படுகாயமடைந்தனர். ஏற்கனவே, படுகொலைகள் தொடர்பாக ஹசீனா உட்பட 45 பேருக்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
The post வங்கதேச படுகொலைகள் 10 மாஜி அமைச்சர்களுக்கு கோர்ட் சம்மன் appeared first on Dinakaran.