×

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் கின்வென் சாம்பியன்

டோக்கியோ: டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் கின்வென் ஸெங் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின் (25 வயது, 26வது ரேங்க்) உடன் நேற்று மோதிய கின்வென் ஸெங் (22 வயது, 7வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (7-5) என கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

அதே வேகத்துடன் 2வது செட்டிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த கிங்வென் 7-6 (7-5), 6-3 என நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 52 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் கின்வென் வென்ற 3வது பட்டம் இது. கடின தரை மைதானங்களில் அவர் கைப்பற்றும் முதல் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் கின்வென் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Pan Pacific Open Tennis Kinwen ,TOKYO ,China ,Qinwen Zeng ,Dore Ban Pacific Open tennis ,America ,Sophia Kenin ,Pan Pacific Open Tennis ,Qinwen Champion ,Dinakaran ,
× RELATED வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை:...