×
Saravana Stores

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் 78வது ஆண்டு காலாட்படை தினம் அனுசரிப்பு

குன்னூர்: குன்னூரில் மெட்ராஜ் ரெஜிமென்ட் சார்பில் 78வது ஆண்டு காலாட்படை தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 1947ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி காலாட்படையினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, எதிரிகளிடம் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். நமது காலாட்படையின் இந்த வீரச்செயலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், காலாட்படை தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக காலாட்படைக்கு முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில், இன்று காலாட்படை தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, பயிற்சி ராணுவ வீரர், ராணுவ வீரர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர், முன்னாள் பிரிகேடியர் கமாண்டென்ட் தேவராஜ், ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டண்ட் வீரேந்திர வாட்ஸ் ஆகியோர் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

The post குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் 78வது ஆண்டு காலாட்படை தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : 78th Infantry Day ,Coonoor Madras Regiment ,Coonoor ,Medraj Regiment ,Srinagar Air Force ,Jammu and ,Kashmir ,Kashmir valley ,Dinakaran ,
× RELATED குன்னூர் யானை பள்ளம் பழங்குடியினர்...