- கலைஞர் நூற்றாண்டு விழா
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- சென்னை தேனம்பெட் அண்ணா விதவளையம்
- கலைஞர் அரினா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நூற்றாண்டு கொண்டாட்டம்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
சென்னை: என் உயிரினும் மேலான …., ” இறுதி கட்ட பேச்சுப் போட்டியில் இருந்து முதல் மூன்று இடங்களுக்கு தேர்வான பேச்சாளர்களுக்கு, சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (27.10.2024) காலை 10.00 மணிக்கு நடைபெறும் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், பல்வேறு துறைகளிலும் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பியாக திகழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது புகழை இக்கால இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து அணியினரும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திடவும், பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்கள்.
அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிக்கு, 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் திறக்க வேண்டும் என்றும், சிறந்த நூறு இளம் பேச்சாளர்களை தேர்வு செய்து கழகத்திடம் ஒப்படைக்குமாறும் பணித்தார்கள்.
தான் மேற்கொண்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தி தமிழ்நாட்டு மக்களின் மனதில் முக்கிய இடம் பெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தி.மு.க இளைஞரணி சார்பில் “என் உயிரினும் மேலான என்ற பேச்சுப்போட்டியினை அறிவித்து நடத்தி வருகின்றார்.
“என் உயிரினும் மேலான ………” என்ற பேச்சு போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து 17,000 இளைஞர், இளம் பெண்கள் விண்ணப்பித்திருந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த இவர்களுக்கு தமிழ்நாட்டின் 50 இடங்களில் 85 நடுவர்களை கொண்டு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த அடிப்படையில் விண்ணப்பித்திருந்த 17,000 நபர்களிலிருந்து 913 பேச்சாளர்கள் கண்டறியப்பட்டு மண்டல அளவிலான பேச்சுப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.
மண்டல அளவில் நடைபெற்ற பேச்சு போட்டிகளில் இருந்து, மாநில அளவிலான பேச்சு போட்டிக்கு 182 இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். “என் உயிரினும் மேலான …., ” பேச்சுப் போட்டிகள் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதள பக்கங்களிலும் பகிரப்பட்டன.
என் உயிரினும் மேலான …., ” பேச்சுப் போட்டியின் இறுதிச்சுற்று பேச்சுப்போட்டி இளைஞர் அணியின் அலுவலகமான சென்னை தேனாம்பேட்டை அன்பகத்திலும், சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்திலும் நேற்று (26.10.2024) நடைபெற்றது. இறுதிச்சுற்று பேச்சு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 182 பேச்சாளர்களும், தங்களது அபாரமான பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
மேலும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற 182 பேச்சாளர்களும் நேற்றைய தினம் பேருந்துகள் மூலமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின்போது மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சாளர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் எடுத்துக்கொண்டார்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (27.10.2024) காலை 10.00 மணிக்கு நடைபெறும் விழாவில், நேற்றைய தினம் நடைபெற்ற “என் உயிரினும் மேலான …., “இறுதி கட்ட பேச்சுப் போட்டியில் தேர்வான நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்கள் கழகத்தலைவரிடம் ஒப்படைக்கப் பட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் “என் உயிரினும் மேலான …., ” இறுதி கட்ட பேச்சுப் போட்டியில் முதல் முன்று இடங்களை பிடித்த பேச்சாளர்களுக்கு ரொக்ககப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கின்றார். மேலும் முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் ஒன்பது நூல்களையும் வெளியிட்டு சிறப்பிக்கின்றார்.
குறிப்பு: இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை பத்திரிக்கை மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு உடனுக்குடன் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய அண்ணா அறிவாலயத்தில் “வீடியோ அவுட்” வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
The post கலைஞர் நூற்றாண்டு விழா: பேச்சுப்போட்டியில் வென்ற பேச்சாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.