×
Saravana Stores

பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை.! வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

டெல்லி: வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதால் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் சமூக வலைதள பக்கங்கள் மூலம் வருவதால் சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையாக பள்ளி, கல்லூரி மற்றும் விமானங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக். 24-ம் தேதி திருப்பதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (அக். 26) இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்களின் தலா 11 விமானங்களுக்கு மிரட்டல் வந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் ஒழுங்குமுறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டன என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு கடந்த 13 நாட்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான அச்சுறுத்தல்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே வந்தவை.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான பதிவுகள், தகவல்களை ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உடனே நீக்க வேண்டும் என்றும் பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதனிடையே குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள 10 ஹோட்டல்களுக்கு நேற்று (அக். 26) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை.! வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,India ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக...