- இலங்கை கடற்படை
- நாகப்பட்டினம்
- நாகை
- கங்காஷன் கடற்படை தளம்
- இலங்கை கடற்படை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
நாகை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், ஒரு விசைப்படகை பறிமுதல் செய்தனர். அதோடு கைதான மீனவர்களை விசாரணைக்காக காங்கசேன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இலங்கை கடற்கபடைால் தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது அங்கு வரும் இலங்கை கடற்படையினர் மீனவர்களை துன்புறுத்துவதோடு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளது. மேலும் சில சமயங்களில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்குவதும், அவர்களின் வலைகளை பறித்து அனுப்புவது, மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்துகின்றனர். மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். ஆனாலும் கூட மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை மட்டும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் தான் தற்போது நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்தததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீனவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வர வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்..! தொடரும் அட்டூழியம் appeared first on Dinakaran.