கொல்கத்தா: மேற்குவங்கத்தில் டானா புயலுக்கு பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று முன்தினம் அதிகாலை காலை ஒடிசா- மேற்குவங்கத்துக்கு இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஒடிசா, மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. டானா புயலால் மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. நேற்று முன்தினம் மேற்குவங்கம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் பதர்பிரதிமாவில் ஒருவரும், தெற்கு கொல்கத்தாவின் பதானிபூர் பகுதியில் ஒருவரும் டானா புயலால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில் புர்பா பதான் மாவட்டம் பட் பட் என்ற இடத்தில் சந்தன் தாஸ்(31) என்ற தன்னார்வலர் , ஹவுரா முனிசிபல் கார்ப்பரேஷன் பணியாளர் ஒருவர் பலியானார்கள். இதனால் மேற்குவங்கத்தில் டானா புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்து உள்ளது. டானா புயலால் ஒடிசா மாநிலமும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் டானா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியின்போது தவறாக நடந்து கொண்ட 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
The post ஒடிசா, மேற்குவங்கத்தில் பாதிப்பு டானா புயல் பலி 4 ஆனது appeared first on Dinakaran.