புதுடெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வரும் 31ம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த காலக்கெடுவை 15 நாட்களுக்கு நீட்டிப்பதாக வருமான வரித்துறை நேற்று தெரிவித்துள்ளது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் நவம்பர் 15ம் தேதியாகும். காலக்கெடுவை நீட்டித்ததன் மூலம் பண்டிகை கால கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அவசரமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமென்ற அழுத்தம் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், படிவம் 3சிஇபியில் உள்ள டிரான்ஸ்பர் பிரைசிங் சான்றிதழ் மற்றும் படிவம் 10டிஏ போன்ற பிற வருமான வரிப் படிவங்களுக்கு இந்த கால நீட்டிப்பு பொருந்தாது.
The post கார்ப்பரேட்களுக்கான வருமான வரி தாக்கல் அவகாசம் நீட்டிப்பு: நவ.15 கடைசி நாள் appeared first on Dinakaran.